மலேசியாவில், மாரியம்மன் கோவிலில், சுவாமி கும்பிட்டு கொண்டிருந்த நபரை, மர்ம ஆசாமிகள் 2 பேர், சுட்டு கொன்றனர். மலேசியாவின், ஜோஹோர் மாகாணத்தின், நூசாஜயா பகுதியில் கால்நடை பண்ணை வைத்திருந்தவர், ஜகந்நாதன், 37; இந்திய வம்சாவளி. இங்குள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை, குடும்பத்தோடு சென்று, சுவாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சரமாரியாக சுட்டதில், ஜகந்நாதன், உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்