அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண், சுவாதி தாண்டேகர் போட்டியிட உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தவர் சுவாதி.
நாக்பூர் பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றவர்; 1973ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். ஐயோவா மாவட்டத்தின் மேரியான் பகுதியில் வசித்து வந்த அவர், பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இப்போதும் அம்மாவட்ட பொது பயன்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள,
அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து இவர் போட்டியிட உள்ளார். இதற்கான அனுமதியை, அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி வழங்கியுள்ளது. இதன் மூலம், அந்த பொறுப்புக்கு, ஐயோவா மாவட்டத்திலிருந்து போட்டியிடும், முதல், இந்திய - அமெரிக்கர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு கணவரும், இரண்டு ஆண், ஒரு பெண் வாரிசுகள் உள்ளன. கணவர் அரவிந்த், தொழிலதிபராக உள்ளார். மகன்கள், அஜய் மற்றும் கோவிந்த்துக்கு திருமணமாகி விட்டது. மகள், அயானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.