பிரிட்டிஷ் அரசி, இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய, "லிமோசின்' கார், 41 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி, இரண்டாவது எலிசபெத், அரியணையில் ஏறி, 61 ஆண்டுகள் ஆகின்றன. அவரிடம் பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. கடந்த, 2001 முதல் 2004 வரை, "லிமோசின்' காரை அவர் பயன்படுத்தினார். நவீன வசதிகள் கொண்ட, இந்த காரில், கைப்பையை மாட்டும் ஹோல்டரும் உள்ளது.
காரின் பின்பக்க கண்ணாடியில், நியானில், ஒளிரும் நீல நிற விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியிடம், இந்தக் காரை ஒப்படைப்பதற்கு முன், 2,500 மைல் தூரம் ஓட்டி, சோதனை செய்யப்பட்டது. இரண்டாவது எலிசபெத், இந்தக் காரை, 11,000 மைல் தூரம் ஓட்டியுள்ளார். பிரிட்டனின், புரூக்லாண்ட் மியூசியத்தில், கடந்த வாரம், இந்த கார் ஏலம் விடப்பட்டது. இயான் லில்லிகிரேப் என்பவர், இந்தக் காரை, 41.23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்தக் காருடன், அதன் உண்மையான ஆவணங்களும், கார் டிரைவர் சீட்டில், அரசி அமர்ந்திருக்கும் படமும் வழங்கப்பட்டுள்ளன.