ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை எனினும் புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்